விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் | எக்கோ பட இயக்குனருக்கு இறால் பிரியாணி விருந்தளித்த பிரபாஸ் | அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு நன்றி சொன்ன மோகன்லால் மகள் | கணவர் டைரக்ஷனில் சல்மான் கானுக்கு ஜோடியாகும் சமந்தா |

மாஸ்டர் படத்தை அடுத்து விஜய்யின் 67வது படத்தை தற்போது இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. அடுத்தபடியாக மூன்றாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாரிசு படம் திரைக்கு வந்ததும் விஜய் 67வது படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த லோகேஷ் கனகராஜ், தற்போது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு பிப்ரவரி மாதத்தில் விஜய் 67வது படத்தின் அறிமுக டீசர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் வட்டாரத்தில் பரபரப்பு அதிகரித்து இருக்கிறது.




