இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

இளன் இயக்கத்தில் கவின் நடித்து வந்த ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ஸ்டார் படம் வருகிற மே மாதம் பத்தாம் தேதி திரைக்கு வர இருப்பதாக ஒரு பதிவு போட்டுள்ளார் கவின். அதோடு காலண்டர், டைரி, போன் இல்ல மனசுல எதுல முடியுமோ அதுல குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மே 10 முதல் ஸ்டார் ரிலீஸ் என்று அப்படத்தில் தான் இடம் பெற்ற ஒரு போட்டோவையும் பதிவிட்டுள்ளார் கவின். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அதிதி பொலங்கர் நடிக்க, லால், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.