மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

சுந்தர் சி இயக்கி, கதாநாயகனாக நடிக்க, தமன்னா, ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்க உருவாகியுள்ள படம் 'அரண்மனை 4'. இப்படத்தின் வெளியீடு ஏப்ரல் 26 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென வெளியீட்டை மே 3ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்கள்.
சில தினங்களுக்கு முன்பு படங்களை தள்ளி வைக்கச் சொல்கிறார்கள் என ரெட் ஜெயன்ட் நிறுவனம் மீது நடிகர் விஷால் குற்றம் சாட்டியிருந்தார். அவர் நடித்துள்ள 'ரத்னம்' படம் ஏப்ரல் 26ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்திற்கும் என்ன நடக்கும் என்று தெரியாது என அவர் கூறியிருந்தார்.
'அரண்மனை 4' படத்தை கம்பெனி பெயர் இல்லாமல் ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான் வெளியிடுகிறது என்பது கோலிவுட் தகவல். நேற்று நடந்த 'ரத்னம்' பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூட விஷாலிடம் நீங்கள்தான் தள்ளி வைக்கச் சொன்னீர்களா என்று கேட்ட போது பதறினார்.
“நான் அப்படி எதுவும் சொல்ல மாட்டேன், சிறிய படங்கள் கூட ஓட வேண்டும் என்பது எனது ஆசை. 'அரண்மனை 4' தள்ளிப் போக வேறு ஏதோ காரணம் இருக்கலாம். சுந்தர் சி சார் எனது அண்ணன் போன்றவர்,” என்றார்.




