அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

தரணி இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் 2004ல் வெளிவந்த படம் 'கில்லி'. இப்படம் உலகம் முழுவதும் வெளிநாடுகளில் இன்றும், இந்தியாவில் நாளையும் ரீ-ரிலீஸ் முறையில் வெளியாகிறது.
வெளிநாடுகளில் மட்டும் 350க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாவது புதிய சாதனை. புதிய படங்கள்தான் அவ்வளவு தியேட்டர்களில் வெளியாகும். ஆனால், ஒரு ரீ-ரிலீஸ் படத்திற்கு அவ்வளவு தியேட்டர்கள் என்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல இந்தியாவிலும் 300க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகிறதாம். தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் நாளை வெளியாகிறது.
பல தியேட்டர்களில் முன்பதிவுகள் அரங்கு நிறையும் அளவுக்கு நடந்துள்ளது. வார விடுமுறை நாட்களிலும் குறிப்பிடத்தக்க முன்பதிவு நடந்துள்ளது. இதுவரை வெளியான ரிரிலீஸ் படங்களில் இந்தப் படம் புதிய வசூல் சாதனை படைக்கும் என்கிறார்கள்.