இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் |

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் கவின். டாடா படத்தின் வெற்றிக்கு பின் தற்போது இளன் இயக்கத்தில் ‛ஸ்டார்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுதவிர இன்னொரு படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து புதுமுக இயக்குனர் விக்ரனன் அசோகன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை ஆண்ட்ரியா ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தில் ஆண்ட்ரியா வில்லி வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்குகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.