சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன் முறையாக நடித்த 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு பெரும் பகுதி மலேசியாவில் நடந்தது. அங்கு படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களிலேயே அடிக்கடி 'கபாலி' படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. தொடர்ந்து பலரும் அதை வெளியிட ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் ரஜினிகாந்த் தரப்பிலிருந்து ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்க, அதன் பிறகே அப்படிப்பட்ட காட்சிகள் வெளியானது குறைந்து போனது.
இப்போது, பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கும் 'காலா' படப்பிடிப்பு மும்பையில் ஆரம்பமானது. படப்பிடிப்பு ஆரம்பமான நாளிலிருந்து தொடர்ந்து படப்பிடிப்புக் காட்சிகள் வெளியாகி வருகின்றன. தினமும் நான்கைந்து புகைப்படங்களாவது சமூக வலைத்தளங்களில் வந்துவிடுகின்றன.
அனைவருடைய கையிலும் விலை உயர்ந்த தரமான ஸ்மார்ட் போன்கள் இருப்பதால் மிகவும் தொலைவில் இருந்தால் கூட ரஜினிகாந்தை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுகின்றனர்.
'கபாலி' படத்திற்கு இதே போன்ற நிலைமை வந்த போது ரஜினிகாந்த் தரப்பிலிருந்து அப்படி வெளியிடாதீர்கள் என்ற கோரிக்கை வந்தது. ஆனால், 'காலா' படம் ஏறக்குறைய ரஜினி குடும்பத்தின் தயாரிப்புதான். அப்படியிருக்கும் போது இன்னும் அவர்கள் தரப்பிலிருந்து எந்த ஒரு கோரிக்கையும் வராதது ஆச்சரியமாக உள்ளது.
அப்படியே கோரிக்கை வந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு 'காலா' படப்பிடிப்புக் காட்சி புகைப்படங்கள் வெளியிடுவதை நிறுத்துவார்களா என்பதும் சந்தேகம்தான். அடுத்த கட்டப் படப்பிடிப்பு சென்னையில், தனியார் ஸ்டுடியோவில் நடக்க உள்ளதால் இங்கு அப்படி வெளியாக வாய்ப்புகள் இல்லை.