மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர் | புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் | சண்டைக் காட்சியில் நடித்த போது விபத்து! ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் மருத்துவமனையில் அனுமதி! | ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ் | பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ் | போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு கூலி என பெயரிட்டு அதன் அறிமுக வீடியோ நேற்று வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம், லியோ போன்ற படங்களில் அவருடன் இணைந்து திரைக்கதை எழுதிய இயக்குனர் ரத்னகுமார், லியோ பட விழாவில் ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் ரஜினி 171 வது படத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது ரத்னகுமாருக்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் திரைக்கதை வசனம் எழுதிய சந்துரு அன்பழகன் என்பவர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து கூலி படத்திற்காக திரைக்கதை வசனம் எழுதி வருகிறார். மாவீரன் படத்துக்கு இவர் எழுதிய வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதால், கூலி படத்தில் அவருக்கு வாய்ப்பு அளித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.