பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு | தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு |

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று(ஏப்., 23) கோலாகலமாய் நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்தனர். அழகர் ஆற்றில் இறங்கிய வைபவத்தை அருகில் இருந்து பார்த்தது பற்றி நடிகர் சூரி நெகிழ்ச்சி உடன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‛‛அரை டவுசர் வயதில் அப்பாவின் தோள் மீது உட்கார்ந்து முதன்முதலில் அழகரை பார்த்தேன். "இவர்தான்டா அழகர்... நல்லா பாரு என்றார் அப்பா... மறக்க முடியாத நாள் அது... அதுக்கப்புறம் இப்போது தான் இவ்வளவு அருகில் அழகரை பார்க்கிறேன், பேரானந்தம். நம்ம கள்ளழகர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.