லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான இனிமேல் என்ற ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்த ஆல்பம் யூடியூப்பில் தற்போது 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. கடந்த மார்ச் 25ம் தேதி தேதி வெளியான இந்த ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் இன்றைய காதலர்களின் எண்ண உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருந்தார்கள். அதேபோல் இக்காலத்து காதலர்களின் செயற்பாடுகளை சிறப்பாக படமாக்கி இருந்தார்கள். இந்த ஆல்பம் இன்றைய நவீன இளைஞர்களின் அனைத்து காதல் நிலைகளையும் சித்தரிக்கும் வகையில் அற்புதமாக இருப்பதாக பலரும் சோசியல் மீடியாவில் லைக் கமெண்ட்டுகளை கொடுத்து வருகிறார்கள். இனிமேல் ஆல்பத்தின் பாடல் வரிகளை கமல்ஹாசன் எழுத, ஸ்ருதிஹாசன் இசையமைத்து, பாடியிருந்தார்.