'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி- 2 படம் மூன்று வாரங்கள் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்திய சினிமா வரலாற்றில் 1000 கோடி வசூலைத் தாண்டிய முதல் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள பாகுபலி-2 படத்தை பாராட்டாதவர்களே இல்லை. இதற்கு பிரபலங்களும் விதிவிலக்கில்லை.
பொதுவாக மற்றவர்களின் படங்களை பற்றி ட்விட்டரில் கருத்து சொல்லாத ரஜினியே பாகுபலி- 2 படத்தை பாராட்டித்தள்ளினார்கள். ரஜினி மட்டுமல்ல, தமிழ்த்திரையுலகைச் சேர்ந்த அனைவரம் பாகுபலி-2 படத்தை பாராட்டித்தள்ளினார். இந்தப்பட்டியலில் சேராதவர் கமல்ஹாசன் ஒருவர் தான். என்ன காரணத்தினாலோ பாகுபலி-2 படம் பற்றி கமல் வாயைத்திறக்காமலே இருந்தார்.
பாகுபலி-2 படத்தை ரஜினிக்கு பிரத்யேகமாக திரையிட்டனர். ஆனால் கமலுக்கு திரையிட்டு காட்டவில்லை. அதனால்தான் கமல் கருத்து சொல்லவில்லை என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் பாகுபலி-2 படம் வெளியாகி மூன்று வாரங்கள் கழித்து வாயைத் திறந்திருக்கிறார் கமல்.
“பாகுபலி-2 படத்தின் பிரம்மாண்டமான கிராபிக்ஸ் வேலைகள், ரசிகர்களின் கற்பனைக்கு அதிகம் உதவியிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக, எங்களால் ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்று அவர்கள் கூறுவதை ஏற்க முடியாது. பாகுபலி-2, சிறந்த படம் என்ற உங்களின் தீர்மானத்தைக் கொஞ்சம் நிறுத்தி வையுங்கள். நாம் போக வேண்டிய தூரம் இன்னும் உள்ளது.” என்கிற ரீதியில் பாகுபலி-2 படம் பற்றிய தன்னுடைய கருத்தை தைரியமாக தெரிவித்திருக்கிறார் கமல்.
இதன் மூலம் கமல் என்ன சொல்ல வருகிறார்? பாகுபலி-2 படத்தின் கிராபிக்ஸ் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், அதை உலக மகா படம் என்பதை தான் ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்லி இருக்கிறார். அதோடு, பாகுபலி-2 கதையும் தனக்கு ஏற்புடையதல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.