மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

அமெரிக்காவில் அடுத்தாண்டு நடக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்திய திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உள்ளிட்ட 534 கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உலகளவில் திரைத்துறைக்கு ஆஸ்கர் விருது கவுரவமாக பார்க்கப்படுகிறது. இதற்கு தனி மதிப்பும், மரியாதையும் உருவாகியிருக்கிறது. இந்தியா சார்பில் இதுவரை இசையமைப்பாளர்கள் ஏஆர் ரஹ்மான், கீரவாணி ஆகியோர் ஆஸ்கர் விருது வென்றுள்ளனர்.
இந்நிலையில் உலகளவில் திரைத்துறையில் சிறப்பாக பங்காற்றிய திரைக்கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து தமிழகத்தை சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, நடிகை கரண் மாலி, ஒளிப்பதிவாளர் ரன்வீர் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, ஆவணப்பட தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா மற்றும் திரைப்பட இயக்குனர் பாயல் கபாடியா ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர். கமல்ஹாசனுக்கு ஆஸ்கர் விருது வழங்கும் கீழ் அழைப்பு விடுத்துள்ளது.
98வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் மார்ச் 15ல் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை கோனன் ஓ'பிரையன் தொகுத்து வழங்குவார். விருதுக்கான பரிந்துரைகள் ஜனவரி 22ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டு அழைக்கப்பட்ட குழுவில், 41% பேர் பெண்கள், 45% பேர் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள், மற்றும் 55% பேர் அமெரிக்காவுக்கு வெளியே உள்ள 60 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்த அழைப்புகளை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே 2025ம் ஆண்டில் அகாடமியின் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள். இந்த நிலையில், சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தும் விதமாக கமல்ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோர் ஆஸ்கர் அகாடமியில் சேர்வதற்கான அழைப்பை பெற்றுள்ளனர். இந்த புதிய உறுப்பினர்கள் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த மேலும் பல முக்கிய ஆளுமைகள் இடம் பிடித்துள்ளனர்.