'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! |

‛பேரன்பு' படத்திற்கு பிறகு ராம் இயக்கி உள்ள படம் 'பறந்து போ'. இந்த படத்தில் மிர்ச்சி சிவா நாயகனாகவும், மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி நாயகியாகவும், குழந்தை நட்சத்திரம் மிதுல் ரேயோன், அஞ்சலி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளனர். படம் வருகிற ஜூலை 4ம் தேதி வெளியாகிறது.
இதில் மலையாள நடிகை கிரேஸ்ஆண்டனி கால்ஷீட்டுக்காக 4 மாதங்கள் காத்திருந்திருக்கிறார் ராம். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ‛‛கனவுகளை அடைவதற்காகப் போராடும் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் கதைதான் இந்தப் படம். தங்களால் அடைந்துவிட முடியாத அனைத்தையும் தங்கள் குழந்தைகளாவது அடைந்துவிட வேண்டும் என்பதற்காக அயராது உழைக்கும் அப்பா அம்மாக்களின் கதைதான் இது.
அவர்கள் தங்கள் குழந்தைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்கிறார்கள். ஆனால் குழந்தைகளுக்கு எது தேவை என குழந்தைகளிடம் அவர்கள் கேட்பதில்லை. குழந்தைகளின் உலகத்திற்கும் பெற்றோர்களின் உலகத்திற்குமான இடைவெளி கூடிக்கொண்டே போகிறது. இப்படிப்பட்ட குழந்தைகளின் உலகத்திற்கும் பெற்றோர்களின் உலகத்திற்கும் நடக்கிற உரையாடலே படத்தின் கதை.
கிரேஸ் ஆண்டனிக்கு தமிழில் இது முதல் படம். 'கும்பளங்கி நைட்ஸ்' படத்தில் நடித்திருக்கிறார். அவர் நடித்த 'அப்பன்' படம் பார்த்தேன். அதில் 15 நிமிடமே ஒரு கேரக்டரில் வந்து ரியாக்ஷன்களில் பிரமாதப்படுத்தியிருப்பார். இவர்தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, அவருக்காக நான்கு மாதம் வரை காத்திருந்து அவரைக் கொண்டு வந்தேன். கிரேஸ் கொஞ்சம் முயற்சி செய்தால் ஊர்வசி இடத்திற்கு வந்து உட்கார்ந்துவிடுவார். தமிழில் அவருக்கு ஒரு கதவு திறக்கும் என்பது என் கணிப்பு'' என்கிறார் ராம்.