ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
அந்த காலத்தில் காமெடி ஜோடியாக வலம் வந்தவர்கள் என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ.மதுரமும். பின்னாளில் இருவரும் திருமணம் செய்து கொண்டு நிஜத்திலும் ஜோடியானார்கள். இவர்கள் நடிக்காத படமே இல்லை என்கிற அளவிற்கு இந்த ஜோடி கொடி கட்டிப்பறந்தது. இவர்களின் காமெடி கதைகள் தனியாக படமாக்கப்பட்டு படத்துடன் இணைக்கப்பட்டு வெளிவந்த காலமும் உண்டு.
இப்படியான நிலையில் இவர்களுக்கு போட்டியாக இன்னொரு காமெடி ஜோடியும் வலம் வந்தது. இவர்கள் அளவிற்கு வெற்றி பெறவாவிட்டாலும் இந்த ஜோடியும் மக்களை சிரிக்க வைத்தது. அது காளி என்.ரத்னம் - சி.டி.ராஜகாந்தம் ஜோடி.
மேடைகளில் காளி வேடமிட்டு புகழ்பெற்ற ரத்னம், சினிமாவில் காளி.என்.ரத்னம் என்ற பெயரில் நடித்தார். ராஜகாந்தம் கோவை எஸ்.ஆர்.ஜானகி நாடக குழுவில் காமெடி வேடங்களில் நடித்து வந்தார். 1939ம் ஆண்டில் வெளியான மாடர்ன் தியேட்டர்சின் 'மாணிக்கவாசகர்' படத்தில் காமெடி நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் அவருடன் நடித்த காளி என்.ரத்னம் பின்னர் ராஜாகாந்தத்தை தன் குழுவில் இணைத்துக் கொண்டார்.
இருவரும் இணைந்து நடித்த உத்தம புத்திரன் (1940) படம் இந்த ஜோடிக்கு நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது. தொடர்ந்து ஊர்வசி, சூர்யபுத்திரி, பக்த கௌரி, மாயாஜோதி, தயாளன், சபாபதி, சிவலிங்க சாட்சி, மனோன்மணி, சதி சுகன்யா, கங்காவதார், அல்லி விஜயம், பஞ்சாமிருதம், பிருதிவிராஜ், காரைக்கால் அம்மையார், திவான் பகதூர் மற்றும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். ஒரு கட்டத்தில் காளி.என்.ரத்தினத்திடம் இருந்து பிரிந்து கே.சாரங்கபாணியுடன் நடிக்க ஆரம்பித்தார். சினிமா வாய்ப்பு குறைந்ததும் காமெடி நாடக குழுவை ஆரம்பித்து நடத்தினார்.
2003ம் ஆண்டில் ஒளிப்பரப்பான 'மர்மதேசம்' தொடரில் சுருட்டு புகைக்கும் சூனியக்கார கிழவியாக நடித்து அடுத்து தலைமுறைக்கும் அறிமுகமானார். தனது 86வது வயதில் சென்னையில் காலமானார்.