பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சசிகுமார் நடித்த குட்டிப்புலி படத்தை இயக்கியவர் முத்தையா. அதையடுத்து கொம்பன், மருது ஆகிய படங்களை இயக்கியவர் மீண்டும் சசிகுமார் நடிப்பில் கொடிவீரன் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படமும் கிராமத்து மண்வாசனைக்கதையில் உருவாகிறது. மேலும், சசிகுமார் நடித்த படங்களில் இப்படம் அதிக பட்ஜெட்டில் மெகா படமாக உருவாகிறது. இப்படத்தில் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கும் நிலையில், ஆக்சன் கிங் அர்ஜூன் வில்லனாக நடிக்கிறார்.
கன்னட சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்து நாயகனாக நடித்து வந்தபோது பல படங்களில் கிராமத்து நாயகனாக நடித்தவர் அர்ஜூன். நீண்டகாலமாக நாயகனாக நடித்து வந்த அவரை, தனது கடல் படத்தில் வில்லனாக்கினார் மணிரத்னம். அதையடுத்து சில படங்களில் பாசிட்டிவான ரோல்களில் நடித்து வரும் அவர், தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜூனை வைத்து காதலின் பொன்வீதியில் என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், சசிகுமாரின் கொடிவீரன் படத்தில் அதிரடியான கிராமத்து வில்லனாக நடிக்கிறார் அர்ஜூன். பக்கா கிராமத்து கெட்டப்புக்கு மாறும் அர்ஜூன் மெகா நடிகர் என்பதால் அவருக்கான பில்டப் காட்சிகளும் அதிகப்படியாக கொடுக்கப்படுகிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.