சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
இந்தியத் திரையுலகில் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று 'பாகுபலி 2', மற்றொன்று '2.0'. இந்த இரண்டு படங்களும் பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வந்தாலும் அதைவிட பல மடங்கு ரூபாயை லாபமாகப் பெற்றுவிடும் என்று திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். '2.0' படத்தின் வியாபாரப் பேச்சு வார்த்தைகள் இன்னும் சூடுபிடிக்கவில்லை. ஆனால், 'பாகுபலி 2' படத்தின் பல வியாபாரங்கள் ஏறக்குறைய முடிந்துவிட்டன. முழுவிவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.
'பாகுபலி 2' படத்தின் இசை வெளியீடு வரும் 26ம் தேதி ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அந்த விழாவின் இசை வெளியீட்டு உரிமையை தொலைக்காட்சிகளுக்கு விற்ற வகையில் சுமார் 1 கோடி வரை தயாரிப்பு நிறுவனத்திற்குக் கிடைக்கும் என்கிறார்கள். நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ள செய்தித் தொலைக்காட்சிகளில் தயாரிப்பு நிறுவனத்தினர் இலவசமாக விளம்பரம் செய்து கொள்ள தொலைக்காட்சி நிறுவனங்கள் அனுமதித்துள்ளதாம்.
ஏற்கெனவே, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளின் தொலைக்காட்சி உரிமைகளை விற்ற விதத்தில் சுமார் 100 கோடி வரை சம்பாதித்துவிட்டார்களாம். இன்னும் பல வியாபார உரிமைகளை விற்றதையும் சேர்த்தால் 'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தை விட இரு மடங்கு அல்லது அதற்கு மேலும் 'பாகுபலி 2' சம்பாதித்துக் கொடுக்கும் என்கிறார்கள்.
'பாகுபலி 2' படம் ஏப்ரல் மாதம் வெளியாகி பின்னர் ஓடி முடித்து வசூலான தொகையை வைத்து அடுத்து வெளிவர உள்ள '2.0' படத்துடன் ஒப்பிட ஆரம்பிப்பார்கள். 2017ம் ஆண்டு முடிவில் இந்த ஆண்டில் அதிக வசூலை அள்ளியது 'பாகுபலி 2' படமா அல்லது '2.0' படமா என்று பட்டிமன்றம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.