'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மலையாள திரையுலகில் இதுநாள்வரை வெளியான படங்களில் அதிகப்படியான வசூலை ஈட்டிய முதல் மூன்று படங்களுமே மோகன்லாலின் படங்களாக அமைந்துவிட்ட சாதனையைப்பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்.. முதல் இடத்தை பிடித்திருந்த 'த்ரிஷ்யம்' படத்தை, அதற்குப்பின் வெளியான மோகன்லாலின் 'ஒப்பம்' படம் மெதுவாக நெருங்கி வர, கடந்த மாதம் வெளியான மோகன்லாலின் இன்னொரு படமான புலி முருகனோ, ஹைஸ்பீடில் ஓவர்டேக் செய்து முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டு விட்டது.. அந்தவகையில் த்ரிஷ்யம் படம் வேறு வழியின்றி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது..
அடுத்து இன்னொரு இடியாக இப்போது அந்த சாதனையையும் 'ஒப்பம்' படம், தட்டிப்பறித்துகொண்டுள்ளது. உலகெங்கிலும் சேர்த்த மொத்த வசூலை கணக்கிடும்போது இப்போது 'ஒப்பம்' படமும் த்ரிஷ்யம்' படத்தை ஓவர்டேக் செய்துவிட்டது.. இதற்கு முன்னதாக த்ரிஷ்யம் படம் கேரளாவில் மட்டும் சுமார் 42.5 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. 'ஒப்பம்' படமோ இப்போது 78 நாட்களில் கேரளாவில் மட்டும் 42.7 வசூலித்து இரண்டாம் இடத்தை பிடித்து விட்டது. இன்னும் 20 தியேட்டர்களில் ஓடிக்கொண்டும் இருக்கிறது 'ஒப்பம்'..