புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
தலைப்பைப் பார்த்ததும் விமர்சனங்களுக்குத் தரும் 'ரேட்டிங்' என நினைத்துவிட வேண்டாம். நடிப்பைப் பொறுத்தவரையில் தனுஷும் சரி, விஜய் சேதுபதியும் சரி 'ரேட்டிங்'கிற்கு அப்பாற்பட்டவர்கள்தான். ஏனென்றால் இருவருமே தங்களது யதார்த்தமான நடிப்பினால் எண்ணற்ற ரசிகர்களை தங்கள் பக்கம் வைத்துள்ளார்கள். இருவரும் சிறந்த படங்களில் மட்டுமே நடிப்பார்கள் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஆனாலும், தங்களது படங்கள் வெளியாவது பற்றி இருவரும் அதிக கவனத்தில் இல்லாமல் இருக்கிறார்களோ எனத் தோன்றுகிறது. 80, 90களில் எல்லாம் ஒரு ஹீரோ நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகும், ஏன் சமயங்களில் ஒரே நாளில் கூட வெளியாகும். அந்தப் படங்கள் வெற்றி பெற்ற வரலாறும் உண்டு. இப்போதெல்லாம் ஒரு ஹீரோ நடிக்கும் படங்களுக்கான வெளியீட்டிற்கு குறைந்த பட்ச இடைவெளியாவது இருக்க வேண்டுமென ரசிகர்களும், வினியோகஸ்தர்களும் நினைக்கிறார்கள்.
தனுஷுக்காவது பரவாயில்லை, விஜய்சேதுபதிக்கு மூன்று மாதங்களில் மூன்று படங்கள் வெளியாக உள்ளன. தனுஷ் நடித்துள்ள 'தொடரி' நேற்று வெளியானது. அடுத்து இவர் நடித்துள்ள 'கொடி' அடுத்த மாதம் தீபாவளியன்று வெளியாக உள்ளது. விஜய் சேதுபதி நடித்த 'தர்மதுரை' கடந்த மாதம் வெளியானது. இன்று 'ஆண்டவன் கட்டளை' வெளியானது. அடுத்த மாதம் 7ம் தேதி 'றெக்க' வெளியாக உள்ளது. இப்படி அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் அனைத்தும் நன்றாக இருந்துவிட்டால் பரவாயில்லை. ஆனால், ஒரு படம் சுமாராகப் போனால் கூட அடுத்த படத்தைப் பாதித்துவிடும்.