லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கடந்த 2019ம் ஆண்டு ஆதித்ய வர்மா என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு விக்ரமுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் தற்போது அவர் கபடி விளையாட்டை மையமாக கொண்டு மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். தற்போது இந்த படம் குறித்த ஒரு அப்டேட்டை நடிகர் விக்ரம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், வருகிறான் என்ற வாசகத்தை குறிப்பிட்டு ஒரு போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். அதோடு, நாளைய தினம் இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.