கடந்த 1996ம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படம் 'இந்தியன்'. தற்போது ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் 'இந்தியன் 2' படம் உருவாகி வருகிறது. லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று கடந்த சில மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஏற்படும் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் இப்படம் ஏற்கனவே ஜூன் மாத 13ம் தேதியில் வெளியாகும் என அறிவித்ததில் இருந்து சற்று தள்ளி ஜூலை மாதத்தில் தான் திரைக்கு வரும் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த தேதியில் ஏற்கனவே தனுஷ் இயக்கி நடித்துள்ள 'ராயன்' படத்தை வெளியிட திட்டமிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்தியன் 2 தள்ளிப்போவதால் ராயன் இந்த தேதியில் உறுதியாக வெளியாகும் என்கிறார்கள்.