லோகேஷை அடுத்து அனிருத்தைப் புகழும் ஏஆர் முருகதாஸ் | மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி |
தனுஷ் இயக்கம், நடிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'ராயன்'.
தனுஷ் நடிப்பில் ஒரு 'ஏ' சான்றிதழ் படமாக என பலரும் ஆச்சரியப்பட்டார்கள். அது மட்டுமல்லாது படம் வெளியான பின்பு கலவையான விமர்சனங்கள் வேறு வந்தன. இதனால், படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கப் போகிறது என்ற சந்தேகமும் திரையுலகத்தில் எழுந்தது.
இந்நிலையில் படம் இன்றோ, நாளையோ ரூ.100 கோடி வசூலைத் தொட வாய்ப்புள்ளது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனுஷின் மேனேஜர் ஆன ஸ்ரேயாஸ் வசூல் குறித்த சிலரது பதிவுகளை மறுபதிவு செய்திருக்கிறார். அவர் மறுபதிவு செய்ததால் அதையே ஆதாரமாகவும் எடுத்தக் கொள்ளலாம். இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் ரூ.100 கோடி வசூல் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே வசூலின் உண்மை நிலவரம் தெரியும்.
தனுஷ் நடித்து இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான 'கேப்டன் மில்லர்' சுமார் ரூ.75 கோடி வரை மட்டுமே வசூலித்ததாக சொல்லப்பட்டது.