'சூர்யா 45' படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புதிய தோற்றத்தில் கமல் : அடுத்த படத்திற்கு தயார் | நான்கு நாட்களில் ரூ.240 கோடி வசூல் செய்த வேட்டையன்! | அமரன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிம்பு! | முன்னாள் மனைவியின் புகார் எதிரொலி- நடிகர் பாலா திடீர் கைது!! | அந்தரங்க வீடியோ லீக்... அவமானத்தில் முடிந்த அதீத நட்பு : போலீஸில் ஓவியா புகார் | கங்குவா படத்திற்காக ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தயாரிப்பாளர் | எந்த சூழலிலும் யாருக்கும் பயப்பட மாட்டேன் - அடா சர்மா | குபேரா பட ரிலீஸ் குறித்து புதிய தகவல் இதோ! | தனுஷின் 'இட்லி கடை'யில் இணைந்த நித்யா மேனன், அருண் விஜய் |
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு முன்பாக தியேட்டர் உரிமைகள், இசை உரிமைகளை விற்பதன் மூலம் மட்டுமே வருவாய் வந்தது. அதன்பிறகு ரேடியோ, டிவி, வீடியோ, சாட்டிலைட், ஓடிடி உள்ளிட்ட பல உரிமைகளை விற்பதன் மூலம் வருவாய் வந்தது. காலத்திற்கேற்ப, அறிவியல் மாற்றங்களுக்கேற்ப அவற்றுடன் சினிமாவும் இணைந்து பயணித்து வருவாயை ஈட்டி வருகிறது.
தற்போது சாட்டிலைட் டிவிக்களை விடவும், ஓடிடி உரிமைகள் மூலம்தான் அதிக விலைக்கு படங்கள் விற்கப்படுகின்றன. முன்னணி நடிகர்களின் படங்களை வாங்க மட்டுமே ஓடிடி நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. மற்ற படங்களின் உரிமைகளை வாங்க அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அப்படிப்பட்ட படங்களை வரும் வருவாயை பங்கு பிரிப்பது என்ற அடிப்படையில் விற்கிறார்கள்.
சமீபகாலங்களில் முன்னணி நடிகர்களின் படங்களும் படுதோல்வியை சந்திப்பதால் அப்படங்களின் உரிமைகளை வாங்குவதில் ஓடிடி நிறுவனங்கள் புதிய முடிவுகளை எடுக்க இருப்பதாகத் தெரிகிறது. படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பாக முன்கூட்டியே படங்களின் ஓடிடி உரிமை வாங்கினாலும் பேசியபடி முழு தொகையைக் கொடுக்காமல் பட வெளியீட்டிற்குப் பின்பு அந்தப் படத்தின் வரவேற்பைப் பொறுத்து முடிவு செய்து கொள்ளலாம் என யோசித்து வருகிறார்களாம். சமீபத்தில் வெளிவந்த ஒரு பெரிய படத்தின் தோல்விதான் இதற்குக் காரணம் என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
ஓடிடி உரிமைகளை முன் கூட்டியே விற்க முடியாததால் சில படங்களை ஆரம்பிப்பதையும் தள்ளிப் போட்டு வருகிறார்கள். சில படங்களை 'டிராப்' செய்தும் விட்டார்கள். ஒரு படத்தின் முதலீட்டில் கணிசமான தொகை என்பது ஓடிடி உரிமை மூலமே வருகிறது. இந்நிலையில் ஓடிடிக்கு புதிய படங்களைக் கொடுக்க 8 வார இடைவெளி என தயாரிப்பாளர் சங்கம் சொன்னது போல வந்தால் ஓடிடி உரிமைகளை வாங்குவதிலிருந்து நிறுவனங்கள் பின்வாங்கும் எனத் தெரிகிறது.
அதற்குப் பதிலாக சொந்தமாகவே படங்கள் அல்லது வெப் சீரிஸ்கள் ஆகியவற்றைத் தயாரித்துக் கொள்ளலாம் என சில நிறுவனங்கள் உள்ளுக்குள் ஆலோசித்து வருகிறார்களாம். 2025ல் ஓடிடி உரிமைகள் விஷயத்தில் பெரிய மாற்றங்கள் வரலாம் என்பதே தற்போதை நிலை.