ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
தமிழ், தெலுங்கு இந்த இரண்டு மொழி சினிமாக்களுக்கும் பல ஒற்றுமை உண்டு. தமிழ்ப் படங்கள் தெலுங்கிலும், தெலுங்குப் படங்கள் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாவது வழக்கம். இரண்டு மொழி நடிகர்களும் மாறி மாறி நடிப்பது வழக்கம். பல தமிழ்ப் படங்கள் ஐதராபாத்தில்தான் படமாகிறது. பல தெலுங்கு நடிகர்கள் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்கள். தமிழ் சினிமா மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள்.
தெலுங்கில் சில முக்கிய படங்கள் வெளியானால் அவற்றை அங்குள்ள முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், தமிழில் அப்படியான பாராட்டுக்களை எதிர்பார்க்க முடியாது. தங்களுக்கு நெருக்கமான சிலரது படங்களைப் பற்றி மட்டுமே சிலர் பாராட்டுக்களைத் தெரிவிப்பார்கள்.
தனுஷின் 50வது படமாக கடந்த வாரம் வெளியான படம் 'ராயன்'. இங்கு கலவையான விமர்சனங்களைப் பெற்ற படம். தெலுங்கிலும் டப்பிங் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தைப் பற்றி தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபு, “ராயன், தனுஷ் அற்புதமாக இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார். எஸ்ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ் மற்ற நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மேஸ்ட்ரோ ரஹ்மான் சிறப்பானதொரு பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார். கட்டாயம் பார்க்க வேண்டிய படம்,” என்று பாராட்டியுள்ளார்.
தெலுங்கு நடிகராக இருந்தாலும் சென்னையில் பிறந்த வளர்ந்தவர் என்பதால் அடிக்கடி தமிழ்ப் படங்களைப் பார்த்து அவற்றைப் பாராட்டும் குணம் கொண்டவர் மகேஷ் பாபு. அவரைப் போல இங்குள்ள நடிகர்கள் தமிழ்ப் படங்களைப் பாராட்டுவது இல்லையே ஏன் என பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்.