பிறந்தநாள் கொண்டாடிய திவ்யா கணேஷ்! குவியும் வாழ்த்துகள் | அஷ்வத் - கண்மணி ஹல்தி புகைப்படங்கள் வைரல்! | தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்பார்கள் : சம்ரிதி தாரா | மூன்று மொழிகளில் உருவாகும் படம் 'ஓம் சிவம்' | அக்டோபர் 25ல் வெளிவரும் 'வெனம்' கடைசி பாகம் | பிரபு, வெற்றி நடிக்கும் அப்பா மகன் படம் | தெலுங்கு தமிழில் வெளியாகும் சமுத்திரக்கனி படம் | விஜய் 69-வது படத்தின் டெக்னீசியன் விவரம் வெளியானது | கவுதம் கார்த்திக் பிறந்தநாளில் வெளியான 19வது படத்தின் அறிவிப்பு | நவம்பர் 29ல் ஜப்பானில் வெளியாகும் ஷாருக்கானின் ஜவான் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்ய லட்சுமி, மற்றும் பலர் நடிக்கும் படம் 'தக் லைப்'. இப்படத்திற்கான படப்பிடிப்புகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கூடவே, டப்பிங் பணிகளையும் சேர்த்து முடித்து வருகிறார்கள்.
இன்னும் சில கட்ட படப்பிடிப்புகள் நடைபெற வேண்டி இருக்கிறது. அதில் வெளிநாட்டு படப்பிடிப்புகளும் அடங்கும் என்கிறார்கள். இந்நிலையில் நடிகர் நாசர், நடிகை அபிராமி ஆகியோர் இப்படத்தில் இணைவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
கமல்ஹாசன் நடித்த பல படங்களில் நாசர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடிக்கும் அடுத்த படம் இது. நடிகை அபிராமி 'விருமாண்டி' படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்தார். அந்த பொருத்தமான ஜோடி பற்றி இன்று வரையிலும் பேசப்பட்டு வருகிறது. 20 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்கும் ஒரு படத்தில் மீண்டும் பங்கேற்கிறார் அபிராமி. சமீபத்தில் வந்த 'மகாராஜா' படத்தில் நடித்த அபிராமி 'வேட்டையன்' படத்திலும் நடித்துள்ளார்.