ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
'விக்ரம்' படத்தின் மாபெரும் வெற்றி, வசூலுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனுக்குச் சொந்தமான தயாரிப்பு நிறுவனம் சில படங்களைத் தயாரிப்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வினோத் இயக்கத்தில் 'கமல்ஹாசன் 233', மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனின் 234வது படமாக 'தக் லைப்', ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசனின் 237வது படம், சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்', சிலம்பரசன் நடிக்கும் 48வது படம் என அறிவிப்புகள் வந்தன.
அவற்றில் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பதாக இருந்த 233வது படம் ஏறக்குறைய கைவிடப்பட்டது. அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள 237வது படம் எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியவில்லை. 'தக் லைப்' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. டப்பிங் வேலைகளும் ஆரம்பமாகிவிட்டன.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகப் போகிறது.
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசனின் 48வது படத்தின் தயாரிப்பிலிருந்து கமல்ஹாசன் ஏற்கெனவே விலகிவிட்டதாக செய்திகள் வந்தன. அதற்கான காரணம் என்னவென்பது தெரியவில்லை. இருந்தாலும் கமலும், சிம்புவும் சுமூகமாமகப் பேசி முடிவெடுத்தார்கள் எனச் சொல்கிறார்கள். சரித்திரப் படமாக உருவாக உள்ள படத்தின் சில போஸ்டர்களைக் கூட வெளியிட்டபின் கமல்ஹாசன் விலகியதன் பின்னணியில் படத்தின் பட்ஜெட் தான் காரணமாம். ஏற்கெனவே, 'அமரன்' படத்திற்கான பட்ஜெட் எதிர்பார்த்ததை விடவும் அதிகமானால் கமல் அப்செட்டாக இருந்தாராம்.
இந்நிலையில் அந்தப் படம் சிம்புவின் 50வது படமாகத் தயாராக உள்ளதாம். கமல்ஹாசனுக்குப் பதிலாக அந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது யார் என்பது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது எனத் தகவல்.
இதற்கிடையே சிம்புவின் 49வது படத்தை மலையாளப் படமான '2018' படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி சோஜப் இயக்க உள்ளாராம். 'தி கோட்' படத்தைத் தயாரித்து வரும் எஜிஎஸ் நிறுவனம் அதற்கு சம்மதம் சொல்லிவிட்டதாம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடித்த பின் தனது 50 படத்தை தேசிங்கு பெரியசாமியுடன் சிம்பு தொடர்வாராம்.