'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் சந்தீப் கிஷன். தமிழில் மாநகரம், யாருடா மகேஷ் என்ற திரைப்படத்திலும், கடந்தாண்டு வெளியான தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் மற்றும் ராயன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் நடித்திருந்தார். இவரது கதாபாத்திரம் ராயன் படத்தில் பெரிதும் பேசப்பட்டது.
தற்போது இவர் 'மசாகா' என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். திரிநாத் ராவ் நக்கினா இயக்கிய இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வெளியாகியது. காமெடி கலந்த கதையில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாக உள்ளது. அதன்படி, நாளை 28-ம் தேதி அன்று ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இதனால் இந்த படத்தை ஓ.டி.டி-யில் பார்க்க ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.