'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எம்புரான் திரைப்படம் இன்று (மார்ச் 27) வெளியாக இருக்கிறது. கடந்த 2019ல் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமாகி, மோகன்லாலை வைத்து இயக்கிய லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. லூசிபர் திரைப்படம் வெளியான சமயத்தில் மற்ற மொழிகளில் அந்த படம் பெரிய அளவில் மொழிமாற்றம் செய்து வெளியாகவில்லை. அதனால் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி இந்த படத்தை காட்பாதர் என்கிற பெயரில் ரீமேக் செய்து நடித்தார். இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தை இயக்கினார். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.
இந்த நிலையில் எம்புரான் தெலுங்கிலும் நேரடி தெலுங்கு படம் போல வெளியாக இருக்கிறது. அதேசமயம் லூசிபர் படத்தை ரீமேக் செய்தது போல எம்புரான் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடியாது என்று கூறியுள்ள மோகன்லால், சில காரணங்களையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, “காட்பாதர் படத்தை நானும் பார்த்தேன். ஆனால் அந்தப் படத்தில் தெலுங்கிற்காக சில மாற்றங்களை செய்திருந்தார்கள். லூசிபர் படத்தில் இடம்பெற்று இருந்த சில கதாபாத்திரங்கள் காட்பாதரில் இடம் பெறவில்லை. குறிப்பாக இந்த படத்தில் பிரதான கதாபாத்திரமாக முதல்வரின் மகனாக நடித்திருந்த டொவினோ தாமஸ் கதாபாத்திரம் தெலுங்கு ரீமேக்கில் இடம் பெறவில்லை. ஆனால் இப்போது எம்புரான் படத்தில் டொவினோ தாமஸ் கதாபாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்று இன்னும் சில விஷயங்களால் எம்புரான் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய வாய்ப்பு இல்லை” என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார் மோகன்லால்.