ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகும் படம் 'வீர தீர சூரன் 2'. ஆனால், பி4யு என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் கடைசி நேரத்தில் தொடர்ந்த வழக்கு காரணமாக இன்று காலை 10.30 மணி வரை படத்தை வெளியிட டில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சாட்டிலைட், ஓடிடி உரிமை குறித்த சிக்கல்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. இதில் சாட்டிலைட் உரிமைக்கான ஏழு கோடி ரூபாய் தொகையை விக்ரமின் சம்பள பாக்கிக்காகத் தந்து விடுகிறேன் என தயாரிப்பாளர் கூறியிருந்தாராம். இதைப் பற்றி கேள்விப்பட்டுத்தான் பி4யு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.
வழக்கு மூலமாக படத்திற்குத் தடை என்று வந்ததும், விக்ரம் அந்த ஏழு கோடி ரூபாய் தொகையை தற்போது விட்டுக் கொடுத்துள்ளாராம். இது நேற்றைய பேச்சுவார்த்தையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கை வாபஸ் பெற பி4யு நிறுவனம் முடிவு செய்துள்ளது என்கிறார்கள். அதனால், காலை 11 மணிக்கு மேல் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.