மணிரத்னம் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
கடந்த 2020ல் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்த 'ஓ மை கடவுளே' படத்தின் வெற்றிக்குப் பிறகு சிறிய இடைவெளிக்கு பின்னர் தற்போது அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தனது 26வது படமாக தயாரிக்கின்றது. லியோன் ஜேம்ஸ் இதற்கு இசையமைக்கிறார் என சமீபத்தில் அறிவித்தனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பை வருகின்ற மே மாதத்தில் தொடங்குவதாக கூறப்பட்டு வந்தது. தற்போது இந்த படத்திற்கு 'டிராகன்' என தலைப்பு வைத்துள்ளதாக இன்று பூஜை வீடியோ உடன் அறிவித்துள்ளனர். கூடுதலாக, இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், வி.ஜே. சித்து மற்றும் ஹர்ஷத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என உறுதியாகியுள்ளது.