டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்! | தெலுங்கில் மந்தமான வசூலில் அஜித்தின் விடாமுயற்சி! | சிப்பாய் விக்ரம் இல்லாமல் அமரன் வெற்றி முழுமை பெறாது! - ராஜ்குமார் பெரியசாமி | இளையராஜா பயோபிக் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் | பிளாஷ்பேக் : பாதை மாறி தோற்ற எஸ்.ஏ.சந்திரசேகர் | பிளாஷ்பேக் : சின்ன படம், பெரிய வெற்றி: 80 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஹரிதாஸ்' |
கடந்த 2011ம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் விமல் - இனியா நடித்து வெளியான படம் வாகை சூடவா. இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். அதன்பிறகு, வத்திக்குச்சி, திருமணம் எனும் நிக்கா, குட்டிப்புலி, பாபநாசம், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன் என 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் இவர் இசையமைத்து சமீபத்தில் திரைக்கு வந்த ‛குரங்கு பெடல்' என்ற படத்தில் அவரது பெயர் ஜிப்ரான் வைபோதா என இடம்பெற்றிருந்தது. இந்த பெயர் மாற்றம் குறித்து ஜிப்ரான் அளித்துள்ள பேட்டியில், ‛‛என்னுடைய தந்தை பெயர் கணேஷ் பாலாஜி வைபோதா. வைபோதா என்றால் விழித்தெழுதல் என்று பொருள். சிலகாலம் இஸ்லாம் மதத்தை பின்பற்றி வந்த நான், கடந்த 4 ஆண்டுகளாக மீண்டும் ஹிந்துவாகி விட்டேன். சட்டபூர்வமாகவும் அனைத்து மாற்றங்களையும் செய்து விட்டேன். அதன் காரணமாக ஜிப்ரான் என்ற எனது பெயருடன் எனது தந்தையின் பெயரையும் இணைத்து குரங்கு பெடல் படத்தில் ஜிப்ரான் வைபோதா என டைட்டில் கார்டில் என் பெயரை போட்டேன். மீண்டும் ஹிந்துவாகி விட்டதால் இனி நான் இசையமைக்கும் அனைத்து படங்களிலும் ஜிப்ரான் வைபோதா என்றே எனது பெயர் இடம்பெறும்,'' என்றும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் ஜிப்ரான்.