மம்முட்டி வில்லனாக நடிக்கும் ‛கலம்காவல்' | ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! | வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் | ரூ. 25 கோடி வசூலைக் எட்டிய குடும்பஸ்தன் படம்! | தனுஷ், தமிழரசன் பச்சமுத்து படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! | ‛‛எந்த விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்'' - நடிகர் யோகி பாபு விளக்கம் | சினேகனின் குழந்தைகளுக்கு பெயர்சூட்டிய கமல்ஹாசன் |
ஜெமினி ஸ்டுடியோ எஸ்எஸ் வாசன் தான் தயாரித்து வெளியிடும் படங்கள் அனைத்திற்கும் புதுமையான விளம்பரங்கள் செய்வார். அதன் ஒரு பகுதியாக தான் பிரம்மாண்டமாக தயாரித்த 'நந்தனார்' என்ற பக்தி படத்தை வெளியிட்டபோது படம் வெளியான தியேட்டர்கள் அனைத்தையும் கோவிலாக அலங்கரிக்க ஏற்பாடு செய்தார்.
அதன்படி படம் வெளியான அனைத்து தியேட்டர்களும் அலங்கரிக்கப்பட்டது. படத்தில் முக்கிய கேரக்டராக இருந்த நந்தி சிலையை எல்லா தியேட்டர்களிலும் வைக்கச் செய்தார். ரசிகர்கள் தியேட்டருக்கு செல்லும் போது கோவிலுக்கு சென்றது மாதிரியான உணர்வை ஏற்படுத்தியது. படத்தின் வெற்றிக்கு அது பெரிய காரணமாக அமைந்தது.
63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் பற்றிய கதை. கோவிலுக்கு வெளியில் நின்று சிவனை வழிபட்ட நந்தனாருக்கு நந்தி விலக்கி சிவன் காட்சி அளித்த கதையை அடிப்படையாகக் கொண்ட படம்.
இதில் நந்தனாராக தண்டபாணி தீக்ஷதர் நடித்தார். சுந்தரி பாய், செரு களத்தூர் சாமா, எம்.ஆர் சாமிநாதன் உட்பட பலர் நடித்திருந்தார்கள். படத்தை முத்துசாமி ஐயர் இயக்கி இருந்தார் . எம்.டி.பார்த்தசாரதி, எஸ். நாகேஸ்வரராவ் இசை அமைத்திருந்தனர். 1942 ஆம் ஆண்டு படம் வெளியானது.