பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு படம் ஒன்று, படம் வெளியாகும் அன்றே, ஸ்டார் ஹோட்டல்களில் திரையிடப்பட இருக்கிறது. அதுவும் அந்த சாதனையை படைக்கப்போவது தமிழ்ப்படமான ரஜினியின் ‛கபாலி' படம் தான்.
ரஜினி நடிப்பில் பிரமாண்டமாய் உருவாகியிருக்கும் ‛கபாலி' படம் வருகிற ஜூலை 22ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸாக இருக்கிறது. படத்தின் முதல்நாள் காட்சியை காண ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழகத்தின் அநேக தியேட்டர்களில் ஒருவாரத்திற்கு கபாலி காட்சிகள் புக்காகிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கபாலி படம் தியேட்டரையும் தாண்டி, ஸ்டார் ஹோட்டல்களிலும் ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடந்து வருகின்றன. ஆமாம், இந்தியாவிலேயே முதன்முறையாக படம் திரைக்கு வரும் அன்றே கபாலி படம் ஹோட்டல்களிலும் திரையிடப்பட இருக்கிறது. ஆனால் இது சென்னையில் அல்ல, பெங்களூரில். பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற நட்சத்திர அந்தஸ்த்து பெற்ற பெரிய ஹோட்டல்களான ‛‛ஜேடபுள்யூ மேரியாட், லலித் அசோக், ராயல் ஆர்சிடு, கிரவுன் பிளாஸா'' ஆகியவற்றில் கபாலி படத்தை அதிநவீன முறையில் திரையிட ஏற்பாடு நடந்து வருகிறது.
இந்த ஹோட்டல்களில் குறைந்தது 50 முதல் 300 பேர் வரை அமரக்கூடிய வகையில் கபாலி படம் திரையிட ஏற்பாடு நடந்து வருகிறது. இதன் டிக்கெட் விலை குறைந்தது ரூ.1300-லிருந்து ரூ.2000 வரை விற்கப்படுகிறது. இதனுடன் படம் பார்க்க வருபவர்களுக்கு ஸ்நாக்ஸ்ம் வழங்கப்பட இருக்கிறது. ஜூலை 22, 23 மற்றும் 24-ம் தேதிகளில், நான்கு காட்சிகளாக கபாலி படம் திரையிடப்பட இருக்கிறது.
இந்தியாவிலேயே பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் திரையிடப்படும் முதல் தமிழ்படம் என்றால் அந்த பெருமை கபாலிக்கு தான், அதுவும் ரஜினிக்கு தான் கூடுதல் பெருமை.