பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
ரஜினியின் கபாலி படத்தில் நடித்துள்ள சில வில்லன்களில் மைம் கோபியும் ஒருவர். எனக்கு கபாலி 20-வது படம். இந்த படத்தில் ரஜினி என்கிற சிறந்த நடிகருடன், சிறந்த மனிதருடன் நடித்திருப்பதை பெருமையாக கருதுகிறேன் என்று கூறும் அவர், ரஜினியுடன் நடித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், கபாலியில் நான் மொத்தம் 13 நாட்கள் நடித்தேன். ரஜினி சாருடன் 6 நாட்கள் நடித்தேன். அவருடன் நான் நடித்த முதல்நாள் முதல் காட்சியில் அவரை எதிர்த்து பேசுவது போல்தான் நடித்தேன். நடித்து முடித்ததும், சூப்பர் கலக்கிட்டீங்க -என்று என்னை தட்டிக்கொடுத்தார் ரஜினி சார். அதோடு, பின்னர் அப்படத்தின் நடித்த அனைவருடனும் அவர் நெருங்கி பழகினார். அதனால் அதுவரை ரஜினி சார் என்றதும் பயந்து கொண்டிருந்த எங்களுக்கு பின்னர் அந்த பயம் போனது. அந்த வகையில், கபாலியில் நடிக்கத் தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே எங்களது பயத்தை உடைத்து விட்டார் ரஜினி சார். அது நாங்கள் சகஜமாக நடிக்க உதவியாக இருந்தது.
மேலும், மிகப்பெரிய நடிகராக இருந்தும், மற்றவர்களை பாராட்டும் குணம் அவரிடம் உள்ளது. அதனால்தான் அவர் மென்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். கபாலியில் அவரது சின்னச்சின்ன அசைவுகள் ரசிக்கும் வகையில் இருக்கும். ஸ்பாட்டில் நாங்களெல்லாம் அவருடன் நடித்தபோதும், அவரது நடிப்பை ரசிகர்களாகத்தான் வேடிக்கை பார்த்தோம். அந்த பாக்கியம் கபாலி படத்தில் நடித்ததால் எங்களுக்கு நேரடியாகவே கிடைத்தது.
தற்போது நான் கபாலி, விஜய்-60, கட்டப்பாவை காணோம், தப்புத்தண்டா, மாயவன், பப்பரபாம், மெதுநல்வாடை -என பல படங்களில் நடித்து வருகிறேன். அந்த வகையில், ரஜினி சாரின் கபாலி எனக்கு 20வது படம். இப்படியொரு சிறந்த படத்தில் நடித்ததால் இனிமேல் நான் உலகமெங்கிலும் தெரியும் நடிகர்களில் ஒருவனாகி விடுவேன். இது ரஜினி சார் படத்தில் நடித்ததால் இந்த பெருமை கிடைத்திருக்கிறது என்று கூறும் மைம் கோபி, விஜய்யின் 60வது படத்தில் நானும் ஒரு வில்லனாக நடிக்கிறேன். அந்த வகையில், இந்த ஆண்டில் நான் பல நல்ல படங்களில் நடித்திருந்தபோதும், ரஜினி, விஜய் படங்கள் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளன என்கிறார்.