புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
ரஜினிகாந்தின் 14வது படம் பைரவி. 1978-ம் ஆண்டு வெளிவந்தது. ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா, ஸ்ரீகாந்த், கீதா, ஒய்.விஜயா நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார், எம்.பாஸ்கர் இயக்கி இருந்தார். வேலன் மூவீஸ் சார்பில் பிரபல கதாசிரியரும், வசனகர்த்தாவுமான கலைஞானம் தயாரித்திருந்தார். தங்கை வாழ்கையை நாசமாக்கிய முதலாளியை பழிவாங்குகிற கதை.
இந்தப் படத்தின் சென்னை செங்கற்பட்டு ஏரியா விநியோக உரிமையை பெற்றிருந்தார் அப்போது விநியோகஸ்தராக இருந்த கலைப்புலி எஸ்.தாணு. படம் திரையிடப்பட்ட பிளாசா தியேட்டர் (இப்போது இல்லை) வாசலில் ரஜினிக்கு 35 அடிய உயரக கட்அவுட் வைத்தார் தாணு. பிட் போஸ்டர் அடித்து சென்னை முழுவதும் ஒட்டினார். கட்அவுட்களிலும், போஸ்டரிலும் 'தி கிரேட் சூப்பர் ஸ்டார்' ரஜினியின் பைரவி என்று டைட்டில் போட்டார்.
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் நடித்துக் கொண்டிருந்த நேரம் என்பதால் இந்த அதீத விளம்பரத்தை பார்த்து மிரண்டு தாணுவுக்கு ரஜினி போன் செய்து, “பெரிய ஆக்டருங்க நிறைய இருக்கும்போது அப்கமிங் ஆக்டரான எனக்கு இப்படி செய்றது அவுங்கள அவமானப்படுத்துற மாதிரி இருக்கும். எல்லாத்தையும் ரிமூவ் பண்ணிடுங்க” என்று கூறினார்.
அதற்கு தாணு, “சார் யார் என்ன வேணாலும் நினைச்சுக்கட்டும், என் கண்ணுக்கு நீங்க சூப்பர் ஸ்டாரா தெரியுறீங்க, அப்படித்தான் போடுவேன். நான் பணம் போட்டு படம் வாங்கியிருக்கேன். அதுல லாபம் சம்பாதிக்க என்ன வேணாலும் செய்வேன்” என்று கூறிவிட்டார்.
அன்று முதல் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆனார். 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக தொடர்கிறார். 'பைரவி'யில் இணைந்த அதே தாணுவும், ரஜினியும் இப்போது மீண்டும் 'கபாலி'யில் இணைந்திருக்கிறார்கள்.