புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
ரஜினிகாந்தை ரசிப்பவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருக்கிறார்கள் என்பதை 'கபாலி' பட டீசர் தொடர்ந்து புரிய வைத்து வருகிறது. இந்த டீசர் வெளிவந்ததுமே உலகத்தில் உள்ள பல்வேறு மீடியா மக்களும் 'கபாலி' டீசரைப் பற்றிய கருத்துக்களையும், விமர்சனங்களையும் வீடியோவாகவும் வெளியிட்டு வருகிறார்கள். அதையெல்லாம் மொத்தமாகக் கூட்டினாலே 'கபாலி' டீசருக்குக் கிடைத்த பார்வைகளை விட அதிகப் பார்வைகளைப் பெற்ற வீடியோக்களாகவும் இருக்க வாய்ப்புண்டு.
'கபாலி' படத்தை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டுமென்றால் அந்தந்த நாட்டின் மொழிகளில் டப்பிங் செய்தால் இன்னும் பல சாதனைகளைப் புரியும் என்பது உண்மை. அதை தற்போது மலாய் மொழியில் டப்பிங் செய்யப்பட்ட 'கபாலி' டீசர் புரிய வைத்துள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு மலாய் மொழியில் 'கபாலி' டீசர் ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டது. இரண்டு நாட்களுக்குள்ளாகவே இந்த டீசரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அது மட்டுமல்ல சுமார் 9000 பேர் வரை அந்த டீசரை ஷேர் செய்துள்ளனர்.
ஒரு குட்டி நாட்டில் குறைந்த அளவு மக்கள் பேசும் மொழியான மலாய் மொழியிலேயே 'கபாலி' டீசர் இந்த அளவிற்கு சாதனை புரிகிறதென்றால் இன்னும் உலகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டால் எப்படிப்பட்ட சாதனையைப் புரியும் என்பதைக் கற்பனை செய்தும் பார்க்க முடியாது.