பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
கபாலி படத்தில் டைரக்டர் ரஞ்சித், ராதிகா ஆப்தே, அட்டகத்தி தினேஷ், கலையரசன், ரித்விகா, மைம் கோபி என முற்றிலும் ஒரு இளவட்ட டீமுடன் இணைந்து நடித்துள்ளார் ரஜினி. ஆனபோதும், அவர்களை புதிய வரவுகள் என்று ஓரங்கட்டாமல் சீனியர் நடிகர் - நடிகைகளுடன் நடிப்பது போலவே இயல்பாக நடித்த ரஜினி, தினமும் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு கிளம்பும்போது ஒவ்வொருவராக பார்த்து நன்றி சொல்லிவிட்டுத்தான் வெளியேறினாராம். இதில் அப்படத்தில் நடித்துள்ள அனைவருமே பெருமையாக சொல்கிறார்கள்.
அவர்களில் நாயகி ராதிகா ஆப்தே கூறும்போது, ரஜினி சாருடன் நடித்தது எனது அதிர்ஷ்டம். அதோடு, ஒவ்வொரு காட்சிகளையுமே சிங்கிள் டேக்கில் ஓகே வாங்கிய ரஜினி, மிகவும் உணர்வுப்பூர்வமாக நடித்தார். அவருடன் இணைந்து நடித்த காட்சிகளில் நான் அதை உணர்ந்தேன். குறிப்பாக, இதற்கு முன்பு பார்த்த ரஜினி படங்களில் இருந்து இந்த கபாலி மாறுபட்ட படமாக இருக்கும். ரஜினியை இதுவரை பார்த்திராத புதிய கோணத்தில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம். கண்டிப்பாக கபாலி ரஜினி ரசிகர்களின் பார்வையில் பிரமிப்பாக தெரிவார் என்கிறார்.