புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
படையப்பாவில் ரஜினிக்கே சவால் விடக்கூடிய வேடத்தில் நடித்தவர் ரம்யா கிருஷ்ணன். அந்த படம் அவரது கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. அதேபோல் தற்போது ரஜினியுடன் கபாலியில் நடித்துள்ள பரதேசி தன்ஷிகாவும் ரஜினிக்கு சவால் விடும் வகையிலான வேடத்தில் நடித்திருக்கிறாராம். அதனால் இந்த கபாலி எனது கேரியரில் மிக முக்கியமான படம். சாதாரணமாக ரஜினி படத்தில் ஓரிரு சீன்களில் நடிப்பதே பெரிய விசயம். ஆனால் அவருக்கு எதிரே நின்று சவால் விட்டு நடிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பது பெருமைக்குரிய விசயம் என்று கூறி வரும் தன்ஷிகா, தான் சாய்பாபா பக்தை என்பதால் இந்த படத்தில் இருந்து தனது பெயரையும் சாய் தன்ஷிகா என்று மாற்றி விட்டார்.
இந்த மாற்றம் தனது சினிமா பயணத்தை பெரிய பெரிய மாற்றங்களை ஏற்படுத்தித்தரும் என்றும் அவர் எதிர்பார்க்கிறாராம். அதற்கேற்ப தற்போது மாதவன், துல்கர்சல்மான் இணைந்து நடிக்கும் படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ள தன்ஷிகா, அடுத்தபடியாக சமுத்திரகனியின் கிட்ணா படத்திலும் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களிலும் அவருக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள். இதுதவிரவும் சில மெகா படங்களில் நடிக்க பேச்சுவார்த்தையில் இருக்கிறார். ஆக, கபாலியில் நடித்த நேரம் சாய் தன்ஷிகாவின் மார்க்கெட் சூடுபிடித்து நிற்கிறது.