பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
'இடம் பொருள் ஏவல்' படத்திற்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாக உள்ள படம் 'தர்மதுரை'. ஸ்டுடியோ 9 சுரேஷ் தயாரிக்க உள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க உள்ளார். 'இடம் பொருள் ஏவல்' படத்திற்குப் பிறகு மீண்டும் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா - வைரமுத்து இருவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக இப்படத்தின் பாடல் பதிவு நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாகப் பணியாற்றி ஒரே வீச்சில் படத்திற்கான முழுப் பாடல்களையும் யுவன்ஷங்கர் ராஜா கொடுத்ததைப் பார்த்து கவிஞர் வைரமுத்துவும், தயாரிப்பாளர் சுரேஷும் நெகிழ்ந்ததாக படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
பல ஹிட் பாடல்களைக் கொடுத்த கூட்டணியான இளையராஜா, வைரமுத்து ஒரு கட்டத்தில் பிரிந்தனர். பல வருடங்களாக அவர்களை இணைக்க நடந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. இந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 'இடம் பொருள் ஏவல்' படத்திற்காக யுவனின் இசையில் வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் எழுதினார். அந்தப் படத்தின் பாடல்கள் வெளிவந்து அனைவரையும் ரசிக்க வைத்து வருகின்றன. பட வெளியீடு மட்டும் கால தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் யுவன் - வைரமுத்து கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது திரையுலகில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.