ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
யூ டியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடல்களாக 50க்கும் கூடுதலான தமிழ் சினிமா பாடல்கள் உள்ளன. இசையமைப்பாளர்களில் அனிருத்தின் அதிகமான பாடல்கள்தான் அந்த கிளப்பில் உள்ளன.
அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடலாக யுவன் ஷங்கர் ராஜாவின் 'ரவுடி பேபி' பாடல் இருந்தாலும் அவர் அதிகமான 100 மில்லியன் பாடல்களில் முதலிடத்தில் இல்லை. இருந்தாலும் தற்போது அவரது 6வது 100 மில்லியன் பாடலாக 'தர்மதுரை' படத்தில் இடம் பெற்ற 'மக்க கலங்குதப்பா' பாடல் இடம் பிடித்துள்ளது. இப்பாடல் யூ டியூபில் வெளியாக 7 ஆண்டுகளுக்குப் பிறகு 100 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இதற்கு முன்பாக 'பையா' படத்தில் இடம் பெற்ற 'துளித் துளி' பாடல் 8 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் 100 மில்லியன் சாதனையைப் படைத்தது.
இதற்கு முன்பாக 'மாரி 2 - ரவுடி பேபி', 'என்ஜிகே - அன்பே பேரன்பே', 'டிக்கிலோனா - பேரு வச்சாலும்', 'பையா - துளித் துளி', 'தர்மதுரை - ஆண்டிப்பட்டி கனவா'ஆகிய பாடல்கள் 100 மில்லியன் கிளப்பில் உள்ளன.