நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | தக்லைப் படத்திலிருந்து மீண்டும் விலகினாரா ஜெயம் ரவி? | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் |
ஒரு நடிகையின் முகத்தில் கல்யாண களை வந்து விட்டாலே அவரை கண்டால் காத தூரததுக்கு அப்பால் ஓடி விடுவார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாகி விட்டது. நான் கல்யாணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று த்ரிஷா ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்து நிச்சயதார்த்தமும் நடந்து விட்டபோதும் இப்போது அவரை விடுவதாக இல்லை. கோலிவுட். நான் நீயென்று போட்டி போட்டு அவரை படங்களுக்கு புக் பண்ணி வருகிறார்கள். இதனால் சில மாதங்களில் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு டாடா காட்டி விட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த த்ரிஷாவுக்கு இப்போது நடிப்பை தொடர வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. தன்னை மதிக்கிறவர்களுக்கு தானும் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற பண்பு கொண்ட த்ரிஷா, சினிமா தன்னை அளவுக்கதிகமாக மரியாதை கொடுபபதால் அதை விட்டு எப்படி விலகிச்செல்வது என்று ரொம்பவே யோசிக்கிறாராம்.