சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே என தொடர் ஹிட் படங்களை கொடுத்து வந்ததால் சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அவர் படம் வருகிறது என்பதால் பல படங்கள் பின்வாங்கின. குறிப்பாக, சித்தார்த்கூட பெரிய ஹீரோ சிவகார்த்திகேயன் படம் வருவதால், நான் நடித்துள்ள எனக்குள் ஒருவன் படத்தை ஒரு வாரம் தாமதமாக வெளியிடுகிறோம் என்றார். ஆனால் அந்த அளவுக்கு சிவகார்த்திகேயனுக்கு ஒரு பெரிய இடத்தை பிடித்துக்கொடுக்கும் என்று சினிமா உலகத்தினரே கருதி வந்த காக்கி சட்டை. வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களின் அதிருப்திக்கு ஆளாகி விட்டது. பல ஏரியாக்களில் தியேட்டர்கள் காத்து வாங்குவதாக சொல்கிறார்கள்.
இருப்பினும் அப்படக்குழுவினர், தங்களது படம் எதிர்பார்த்தபடி வசூலிக்காததற்கு காரணம் உலக கோப்பை கிரிக்கெட்தான். தியேட்டருக்கு வரவேண்டிய ரசிகர்கள் டிவி முன்னாடி உட்கார்ந்து விட்டார்கள். அதோடு, மார்ச் 2-ந்தேதியில் பள்ளிகளுக்கு பரீட்சை நடக்கயிருப்பதும் இந்த பாதிப்புக்கு காரணமாகி விட்டது என்கிறார்கள்.