ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த சில வருடங்களாக தனது எஸ்.கே.புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் படங்களைக் தயாரித்து வருகிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, வாழ், கனா ஆகிய படங்களைக் தயாரித்துள்ளார். தற்போது நடிகர் சூரியை வைத்து 'கொட்டுக்காளி' என்கிற படத்தை எடுத்துள்ளார். இந்தப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விருது விழாக்களில் பங்கேற்று வருகிறது.
இந்நிலையில் இப்போது கமலக்கண்ணன் சுப்பிரமணியன் என்பவர் இயக்கத்தில் 'குரங்கு பெடல்' என்கிற வித்தியாசமான படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். காளி வெங்கட் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். சைக்கிள் மற்றும் சிறுவனை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் முதல்பார்வை வெளியாகி உள்ளது.