நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் |
அரை டஜன் படங்களை தயாரித்து வரும் திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் இரண்டு மாத இடைவெளியில் ஒவ்வொரு படமாக வெளியிட திட்டமிட்டிருந்தது. முதல் படமாக சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய்சேதுபதி நடித்த இடம்பொருள் ஏவல் படமும், அதை அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் படமும் வெளியாக இருப்பதாக சொல்லப்பட்டது. அதாவது ஜனவரியில் இடம்பொருள் ஏவல் படமும், பிப்ரவரியில் உத்தமவில்லன் படமும் வெளியாகும் என சொல்லப்பட்டதில் தற்போது மாற்றம்.
இடம் பொருள் ஏவல் படம் ஜனவரியில் இல்லை என்பதோடு, உத்தமவில்லன் படம் ஏப்ரல் மாதம் தான் ரிலீசாகுமாம்! ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களில் ஒன்றான உத்தமவில்லன் கடந்த வருடமே வெளியாகி இருக்க வேண்டிய படம். பல்வேறு வேலைகளையும் முடிக்க காலதாமதம் ஏற்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது அந்த வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. ஆனாலும், இப்படத்தை பிப்ரவரி மாதமோ அல்லது மார்ச் மாதமோ ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று லிங்குசாமியிடம் கமல் கறாராக சொல்லிவிட்டாராம்!
காரணம், பிப்ரவரி, மார்ச் மாதங்கள் பரீட்சை காலம்! கூடவே உலக கோப்பை கிரிக்கெட் போட்டியும் துவங்கவிருக்கிறது. எனவேதான் உத்தம வில்லன் படத்தை கோடை விடுமுறை காலத்தில் வெளியிட சொல்லிவிட்டாராம் கமல். இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. ஆடியோ வெளியீட்டு விழா மிக விரைவில் நடக்க இருக்கிறது.