பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் | டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா | இன்னும் 2 மாதம் டல் சீசன் : பெரிய படங்கள் வராத நிலை | என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு | ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா | அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் |

தெலுங்கு சினிமாவில் என்.டி.ராமராவ், ஒய்.எஸ்.ஆர் ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கை சினிமாவாக தயாரிக்கப்பட்டது, என்.டி.ராமராவ் கேரக்டரில் அவரது மகனே நடித்தார். ராஜசேகர ரெட்டி கேரக்டரில் மம்முட்டி நடித்தார். இந்த நிலையில் ஆந்திரா மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான கும்மடி நரசையாவின் வாழ்க்கையும் படமாக்கப்பட்டு வருகிறது. இவர் ஆந்திர மாநில கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி.
அவரது கதாபாத்திரத்தில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் நடிக்கிறார். பரமேஸ்வர் ஹிவ்ராலே இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை பிரவல்லிகா ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் என்.சுரேஷ் ரெட்டி தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 'அனைவராலும் நேசிக்கப்படும் அரசியல் தலைவர் கும்மடி நரசைய்யா . அடித்தட்டு மக்களுக்காக அரசியலில் தன்னை அர்ப்பணித்த இவர், 1983 முதல் 1994 வரையிலும், பின்னர் 1999 முதல் 2009 வரையிலும், யெல்லந்து தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக, பலமுறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். சாதாரண மக்களின் நலனுக்காக தன்னலமின்றி உழைத்த இவர், தனது உறுதி தவறாத நேர்மைமிகு வாழ்க்கையால், மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றார்.
இந்த மகத்தான நபரின் வாழ்க்கையை, பெரிய திரையில் உயிர்ப்பிக்கும் முயற்சியாக உருவாகியுள்ளது 'கும்மடி நரசைய்யா' எனும் வாழ்க்கை வரலாறு திரைப்படம். இந்தப் படத்தில் தலைசிறந்த கன்னட நடிகர் டாக்டர் சிவராஜ்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திறமையான நடிகராக தன்னை நிலைநிறுத்திய பரமேஷ்வர் ஹிவ்ராலே, இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
'வீரவணக்கம்' என்ற படத்தில் கேரள மாநில கம்யூனிஸ்ட் தலைவர் பி.கிருஷ்ணபிள்ளை கேரக்டரில் சமுத்திரகனி நடித்தது குறிப்பிடத்தக்கது.




