புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் |

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார். 'சிவண்ணா' என்று கன்னட ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறவர். தற்போது தமிழ், தெலுங்கிலும் நடிக்க தொடங்கி உள்ளார். இந்த நிலையில் அவர் நடிக்கும் 131வது படம் அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் அத்வைத் இயக்குகிறார். ஏ.ஜே.ஷெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ். இசை அமைக்கிறார்.
ஆக்ஷன் த்ரில்லர் படமாக தயாராகும் இப்படத்தில் சிவண்ணா வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிக வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். புவனேஷ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் என்.எஸ்.ரெட்டி மற்றும் சுதீர் தயாரிகின்றனர். பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. சிவராஜ்குமார் தற்போது தலா ஒரு தமிழ் படம், ஒரு தெலுங்கு படம், 3 கன்னட படங்களில் நடித்து வருகிறார்.




