காலையில் தெலுங்கு முறைப்படி, மாலையில் கொடவா முறைப்படி…விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் | சிம்புவை வைத்து வரலாற்று படத்தை திட்டமிட்ட ராஜூ முருகன்! | சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்! | திருமணத்தை நம்ப முடியவில்லை : அமலாபால் ஓபன் டாக் | ஜி.வி.பிரகாஷின் 'மென்டல் மனதில்' படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ வெளியானது! | சிவகார்த்திகேயன் அம்மாவாக ரம்யா நம்பீசன் | சினிமா இயக்குவதை மறந்துவிட்டேனா? நடிகர் சமுத்திரக்கனி பதில் | மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பாரதிராஜா : வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் | ரஜினிகாந்த், சிபி படத்தில் இணையும் பசில் ஜோசப், பிரியங்கா மோகன் | 'தாய் கிழவி' பார்த்துவிட்டு அக்கா ராதிகாவை கட்டிபிடித்து அழுதது ஏன்? நடிகை நிரோஷா |

மம்முட்டி நடிப்பில் இந்த வருடம் பஷூக்கா மற்றும் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்த டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் ஆகிய படங்கள் வெளியாகின. தற்போது மோகன்லாலுடன் இணைந்து பேட்ரியாட் என்கிற படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி. சில மாதங்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுத்து வந்தார் மம்முட்டி. அதற்கு முன்னதாக அவர் களம்காவல் என்கிற படத்தில் நடித்து வந்தார். ஆச்சரியமாக இந்த படத்தில் மம்முட்டி வில்லத்தனம் வாய்ந்த கதாபாத்திரத்திலும் வில்லனாக நடித்து வந்த விநாயகன் இதில் பாசிட்டிவான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
ஜிதின் கே.ஜோஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டப்பிங் பணிகள் மம்முட்டிக்காக காத்திருந்தன. தற்போது அவர் மீண்டும் ஆக்டிவாக செயல்பட ஆரம்பித்து விட்ட நிலையில் இந்த படத்தின் டப்பிங்கை முடித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து வரும் நவம்பர் 27ம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மம்முட்டி தயாரித்துள்ள இந்த படத்தை அவரது மகன் துல்கர் சல்மான் தனது, வே பாரர் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




