நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

மோகன்லால் நடிப்பில் இந்த வருடம் வெளியான எல் 2 ; எம்புரான் மற்றும் தொடரும் ஆகிய படங்கள் 200 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி படங்களாக அமைந்தன. இதனை தொடர்ந்து தெலுங்கில் அவர் நடித்துள்ள விருஷபா திரைப்படம் நவம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திரிஷ்யம் 3 மற்றும் பேட்ரியாட் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார் மோகன்லால். அந்த வகையில் மோகன்லால் நடிக்க இருக்கும் அவரது 365வது படத்தை அறிமுக இயக்குனர் ஆஸ்டின் டான் தாமஸ் என்பவர் இயக்குகிறார்.
இவர் கடந்த 2020ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான அஞ்சாம் பாதிரா படத்தில் முதன்மை துணை இயக்குனராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தயாரிப்பாளர் ஆசிக் உஸ்மான் இந்த படத்தை தயாரிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன்லால் இந்த படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடுபுழா, சபரிமலை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.. வரும் டிசம்பர் 5ம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.