சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான கூலி படத்தில் ப்ரீத்தி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். அதையடுத்து டிரெயின் படத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன் அடுத்து பிரபாஸின் சலார் படத்தின் இரண்டாம் பாகத்தில் விரைவில் நடிக்கப் போகிறார். இந்நிலையில் சென்னையில் நடந்த ஒரு செல்போன் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஸ்ருதிஹாசன்.
அப்போது அவர் மீடியாக்களை சந்தித்தபோது, எல்லோரையும் போன்று நானும் செல்போனை ரொம்ப அதிகமாக யூஸ் பண்ணுகிறேன். மற்ற வேலைகளில் இருந்தாலும் கூட செல்போனையும் பயன்படுத்துகிறேன். அதை பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை. செல்போனை பயன்படுத்துவதால் மகிழ்ச்சியாக உள்ளது. அதே சமயம் சில சமயங்களில் அவுட்டோர் செல்லும்போது சிக்னல் கிடைக்கவில்லை என்றால் ரொம்ப வெறுப்பாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.