என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, சீமான், கிர்த்தி ஷெட்டி, கவுரி கிஷன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'எல்.ஐ.கே' (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி). செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இத்திரைப்படம் இவ்வருட செப்டம்பர் 18ம் தேதி அன்று ரிலீஸ் ஆகிறது என அறிவித்திருந்தனர். மேலும் பிரதீப் ரங்கநாதனின் மற்றொரு படமான 'டியூட்' இவ்வருட தீபாவளிக்கு திரைக்கு வருவதாக அறிவித்தனர்.
தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை செப்டம்பர் 18ம் தேதியில் இருந்து தள்ளி இவ்வருட தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வருவதற்காக திட்டமிடுகின்றனர். அதே தேதியில் பிரதீப் ரங்கநாதனின் மற்றொரு படமான 'டியூட்' வெளியாகிறது. இந்த படத்தை தள்ளி வைக்க முடியுமா என்கிற பேச்சுவார்த்தையை தயாரிப்பு நிறுவனத்துடன் நடத்தி வருவதாக சினிமா வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கின்றனர்.