‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

ஓரிரு படங்களில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தாலும் தனது பரபரப்பான பேட்டிகளில் பிரபலமானவர் ஸ்ரீரெட்டி. ஆந்திரா, தமிழ்நாட்டில் உள்ள முக்கிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
ஆனால் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் தான் யு-டியூப்பில் சமையல் நிகழ்ச்சி நடத்தி வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது "சினிமா பாலியல் கொடுமைகளை நான் வெளியே சொன்னபோது, யாருமே எனக்கு ஆதரவு தரவில்லை. சில நடிகைகள் என்னை விமர்சித்தார்கள். ஒரு பார்ட்டியில் எனக்கே வலுக்கட்டாயமாக உதட்டில் 'கொகைன்' தடவி விட்டுள்ளார்கள்.
பல ஆயிரம் கோடி புழங்கும் சினிமா துறையில் நடக்கும் குற்றங்களை வெளியே சொன்னேன். ஆனால் கடைசியில் நான் குற்றவாளியாகி நிற்கிறேன். உண்மையை சொல்லி போராடிய எனக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. எனக்கு அநியாயம் செய்தவர்களை 'கர்மா' இப்போது தண்டனை கொடுத்து கொண்டிருக்கிறது.
சினிமாவில் நடக்கும் அநியாயங்களை தைரியமாக பேசியதால் படவாய்ப்புகள் இல்லாமல் பரிதவித்து நிற்கிறேன். இதனால் நானே ஒரு 'யுடியூப்' சேனல் தொடங்கி சமையல் நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். கவர்ச்சி ஆடை அணிந்து சமையல் நிகழ்ச்சி நடத்துவதாக விமர்சனம் செய்கிறார்கள். எனக்கு வேறு வழியில்லை. எனக்கு பிடிக்காத போதும், கவர்ச்சியை காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். 'யுடியூப்' சேனல் மூலம் கிடைக்கும் வருமானம்தான் இப்போது என்னை வாழ வைக்கிறது" என்கிறார்.