ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் |
காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா- நாகசைதன்யா ஆகிய இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்த போதிலும், தங்களது பிரிவுக்கான காரணத்தை அவர்கள் வெளியிடவில்லை. அதனால் சோசியல் மீடியாவில் அவர்களின் பிரிவு குறித்து பல்வேறு விதமாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக சமந்தாவின் காஸ்டியூமர் பிரீத்தம் ஜுகல்கர் என்பவருடனும் சமந்தாவை இணைத்து செய்திகள் பரவின. அதையடுத்து அதை சமந்தா மறுத்ததோடு, பிரீத்தமும், சமந்தா எனது சகோதரி போன்றவர் என்று பதில் கொடுத்தார்.
இந்தநிலையில் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி அளித்த ஒரு பேட்டியில், சமந்தா- பிரீத்தம் ஜுகல்கரை இணைத்து வெளியான செய்தி பற்றி கூறுகையில், சமந்தா- பிரீத்தமிற்கு இடையிலான நட்பு காரணமாக கண்டிப்பாக சமந்தா விவகாரத்து செய்ய வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். காரணம், பிரீத்தம் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். அதனால் அவர்களுக்கிடையே எந்தவித தவறான உறவும் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். சமீபகாலமாக சமந்தா ஓவரான கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அதனால் நாகசைதன்யா சமந்தாவிற்கிடையே அந்த விசயத்தில்கூட பிரச்சினை உருவாகி பிரிவுக்கு காரணமாகியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி.